அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா : அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
மிரட்டும் கொரோனா
சீனாவில் பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் மூன்றுபேருக்கு இந்த வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் டெல்லியில் இன்று மதியம் உயர்நிலை அதிகாரிகளிடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார் பிரதமர் மோடி.
சீனா , ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது , சீனாவில் ஊரடங்கில் தளர்வினை கொண்டுவந்ததே கொரோனா தொற்று அதிகரிக்க முக்கிய காரணம் என்று சுகாதரா வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்றால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் , இதனால் மீண்டும் முகக்கவசம் அணிவது , விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்வது மீண்டும் கட்டாயமாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
ஆகவே இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவலை அதிகரிக்காமல் தடுக்க உயர்நிலை குழுவுடன் ஆலோசனை நடத்துகின்றர் பிரதமர் மோடி இந்த நிலையில் கொரோனா தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமையகத்தில் ஆலோசனை நடத்தினார்.
இந்த அலோசனை கூட்டத்தில் மருத்துவத்துறை அதிகாரிகள், அமைச்சர் மா.சுப்பிரமணியன், ச தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.