இந்தியாவில் 18 மாநிலங்களில் புதிய வகை உருமாறிய கொரோனா: அடுத்து என்ன நடக்கும்?
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக 40,000க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்து நாட்டில் முதல் முதலாக கண்டறியப்பட்ட நிலையில் அந்த வைரஸ் அனைத்து நாடுகளிலும் பரவி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தற்போதைய நிலையில் இந்தியாவின் 18 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மேலும் பல மாற்றங்கள் அடைந்த வைரஸாக இருப்பதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ் மகாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த 18 மாநிலங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுகாதாரத்துறை கூடுதல் கவனம் எடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் புதிய வகை வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் தற்காலிக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
எனவே மத்திய அரசு கொரோனா பரவலை பொருத்து உள்ளூர் ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ள மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.