இங்கிலாந்தில் 6 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று

covid19 england dead
By Jon Mar 02, 2021 12:19 PM GMT
Report

இங்கிலாந்தில் 6 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று. உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், உருமாற்றம் அடைந்து மீண்டும் பரவலின் வேகத்தை அதிகரித்து வருகிறது. தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடக்கும் இந்த நேரத்தில் உருமாறிய கொரோனா உலக நாடுகளுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் கடந்த சில மாதங்களுக்கு கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா, அந்நாட்டில் மின்னல் வேகத்தில் பரவியது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. தற்போது இங்கிலாந்தில் மெல்ல மெல்ல கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவருகிறது.

இந்த நிலையில், பிரேசிலில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ், இங்கிலாந்தில் 6 பேருக்கு பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் பிரேசிலில் இருந்து இங்கிலாந்து வந்தவர்கள் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய வகை வைரஸ் பாதிப்பு தென்பட்டதையடுத்து, தெற்கு க்ளோசெஸ்டர்ஷைர் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.