தவெக தலைமையில் புதிய கூட்டணி உருவாகிறதா?

TVK
By Fathima Jul 01, 2026 03:53 AM GMT
Report

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது, தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவளித்தனர்.

இதற்கிடையே அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைகின்றனர், இந்நிலையில் இன்று ஆதரவு கட்சித்தலைவர்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது.

ஆதரவு கட்சிகளின் கருத்துகளை கேட்டறிந்து புதிய கூட்டணியை உருவாக்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்திருப்பதாகவும், தங்களது ஆட்சியை அடுத்த 5 ஆண்டுகளுக்கு எந்தவித இடையூறு இல்லாமல் கொண்டு செல்லவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டத்தின் முடிவில் புதிய பெயர் இறுதி செய்யப்படும் என தெரிகிறது, இதில் ஆதரவு கட்சிகளின் எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

குறிப்பாக வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.