கேஜிஎஃப் 2 படத்தில் யாஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா? இதோ வெளியான தகவல்
உலகமெங்கும் மிகவும் பிரமாண்டமாக ஏப்ரல் 14ம் தேதி, யாஷின் கே.ஜி.எப் 2 திரைப்படம் வெளியானது.
கேஜிஎஃப் 2 ஆம் பாகம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் காட்சிகள், இருக்கையின் நுனியில் அமரச் செய்து ரசிகர்களை ரசிக்க வைக்கும்படி அமைந்துள்ளது. கேஜிஎஃப் 2 படத்திற்கான டிக்கெட்டுகள் லட்சக்கணக்கில் விற்பனையாகி வருகிறது. பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய கலெக்ஷனை கேஜிஎஃப் 2 திரைப்படம் பெற்றிருக்கிறது.
படம் வெளியாகி 2ம் நாளே, கேஜிஎஃப் 2 திரைப்படம் 300 கோடிக்கு மேல் உலகளவில் வசூல் ஆனாதாக தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில், தற்போது இப்படத்திற்காக யாஷ்ஷிற்கு ரூ. 25 முதல் 27 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தத் தகவலை விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.