புதிய புயலுக்கு “மாண்டஸ்” என பெயர் வைக்க காரணம் இதுதான்
By Irumporai
வங்கக்கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்படுகிறது.
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 7ம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரெட் அலர்ட்
அதுமட்டுமில்லாமல், டிசம்பர் 8-ஆம் தேதி தமிழகத்தில் சென்னை உள்பட 13 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மாண்டஸ் புயல்
இந்த நிலையில் வங்கக்கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த மாண்டஸ் பெயர் வைக்கப்படுகிறது என கூறப்படுகிறது.