சென்னை சூப்பர் கிங்ஸுடன் இணைந்த ஸ்பான்ஸர்: வெளியான அறிவிப்பு
அசோக் லேலேண்ட் நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்ஸராக ஒப்பந்தம் ஆகியுள்ளது.
ஸ்பான்ஸர் நிறுவனம்
2026 ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஸ்பான்ஸர் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

பன்னாட்டு வாகன உற்பத்தியில் கோலோச்சி வரும் அசோக் லேலேண்ட் நிறுவனம்தான் வருகிற சீஸனில் ஸ்பான்ஸராக இருக்கப்போகிறது.
CSK அணியின் மஞ்சள் ஜெர்ஸியின் வலது மார்பு பகுதியில், அசோக் லேலேண்டின் லோகோ பொறிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரசிகர் பேருந்து
அத்துடன் அசோக் லேலேண்ட் நிறுவனம் ரசிகர்களுக்காக சிறப்பு CSK ரசிகர் பேருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்துஜா குழுமத்தின் தீரஜ் இந்துஜா கூறுகையில், "வரவிருக்கும் 2026 ஐபிஎல் சீஸனுக்கான முதன்மை ஸ்பான்ஸராக சென்னை சூப்பர் கிங்க்ஸுடன் அசோக் லேலேண்ட் கூட்டு சேர்வதில் மகிழ்ச்சி. CSK மற்றும் அசோக் லேலேண்ட் இரண்டும் மீளதன்மை, நிலைத்தன்மை மற்றும் சிறந்து விளங்குவதற்கான இடைவிடாத நாட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்கிறது" என தெரிவித்துள்ளார்.
Delighted to partner with Chennai Super Kings as Principal Sponsor for the upcoming season. Both #CSK and Ashok Leyland share a legacy built on resilience, consistency, and a relentless pursuit of excellence.
— Dheeraj Hinduja (@hinduja_dheeraj) March 6, 2026
A special thank you to Ruturaj Gaikwad and Ayush Mhatre for joining… pic.twitter.com/37XQ1lDjS8