இந்தியாவை ஜெயிக்கிறது கஷ்டமே இல்லை: சூடான இலங்கை அணி கேப்டன்

இந்திய அணியை சமாளிக்கும் வலிமை தங்களுக்கு உள்ளதாக இலங்கை அணியின் புதிய கேப்டனான தசுன் ஷனாகா தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இரு அணிகளும் சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்களைக் கொண்டு இத்தொடரில் பங்கேற்க உள்ளது.

இதனால் ஒருநாள் மற்றும் டி20 தொடரை வெல்ல போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இந்நிலையில் இலங்கை அணியின் புதிய கேப்டனான தசுன் ஷனாகா, என்னை பொறுத்தவரையில் இந்த தொடருக்கான இரு அணிகளுமே சமபலம் கொண்டது தான். இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பல வீரர்கள் ஐபிஎல் தொடரில் அதிக அனுபவம் உள்ளவர்கள் என்றாலும், சர்வதேச போட்டிகளில் அனுபவம் இல்லாதவர்கள்.

எனவே இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு சமமாக உள்ளது. உலகின் தலைசிறந்த அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்