ஓடியாங்க..!ஓடியாங்க..! புத்தாடை வெறும் 6 ரூபாய் மட்டும் தான் - குவிந்த பொதுமக்கள்
மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட கடை ஒன்று திறப்பு விழா சலுகையாக ஆடை ஒன்று வெறும் 6 ரூபாய்க்கு விற்பனை செய்ததால் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில், தீபாவளி பண்டிகையை ஒட்டி புதிதாக ஜவுளிக்கடை ஒன்று திறக்கப்பட்டது. அதில், திறப்பு விழா சலுகையாக ஆறு ரூபாய்க்கு துணி விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு ஏராளமான மக்கள் குவிந்தனர். கொரோனா தடுப்பு விதிகளை மீறி ஒரே இடத்தில் ஏராளமான மக்கள் குவிந்ததால்,
அங்கு வந்த மதுரை மாநகராட்சி அதிகாரிகள் அந்தக் கடையின் உரிமையாளருக்கு அபராதம் விதித்து, தள்ளுபடி அறிவிப்பை ரத்து செய்ய உத்தரவிட்டனர்.
கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.
இந்த சூழலில் இது போன்ற சில நிறுவனங்கள் இது போன்ற அறிவிப்பால் பொதுமக்களை நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.