ஆபிஸ் டென்ஷனை போக்கனுமா.. முதலாளியை மனசார திட்டி தீர்க்க வந்தாச்சு புதிய சேவை!
மேலதிகாரி மீதுள்ள வெறுப்பை ஆள் வைத்து கொட்டி தீர்கவே புதிய சேவை ஒன்று அறிமுகமாகியுள்ளது.
திட்டி தீர்க்க..
பணியில் ஏற்படும் பிரச்சனைகள், மேலதிகாரிகளின் செயல்கள், பணிசுமை, சம்பள உயர்வின்மயால் போன்ற விஷயங்கள் ஊழியர்களுக்கு பல நெருக்கடிகளை உண்டாக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் தங்கள் ஆள் மனதில் தோன்றும் வெறும்மையும், வன்மத்தையும் கொட்டி தீர்க்க வேண்டும் பலருக்கு தோன்றும்.
அப்படி மேலதிகாரிகளை ஆள் வைத்து திட்டும் சேவை அமெரிக்காவில் அறிமுகமாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஸ்டான்ட் அப் காமெடியன் காலிமார் வைட் இந்த விசித்திர நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இவருக்கு இன்ஸ்ட்டாகிராமில் 280,000 பாலோவர்ஸ் உள்ளனர்.
அலுவலக புகார்கள் மற்றும் பிரச்சனைகள் ஏஜென்சி [OCDA (Office Complaints and Disputes Agency)] என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை உருவாக்கி அவர் இந்த சேவையை வழங்கி வருகிறார்.
ஊழியர்களின் பிரச்சனைகளை சரிசெய்து சுயமரியாதை மீட்டெடுத்து ஆரோக்கியமான பணி சூழலை உருவாக்குவதே தங்கள் நோக்கம் என்று தெரிவித்துள்ளார். ஊழியரின் புகார் அடிப்படையில், முதலாளியை சந்தித்து ஊழியர்களின் சார்பில் ஸ்க்ரிப்ட்டின் படி திட்டுவதோ,
புதிய சேவை
அல்லது பிரச்சனைகளை எடுத்துரைக்கவோ செய்வார்கள். அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்ட பிறகு தான் அங்கிருந்து நகர்வார்களாம். ஊழியரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு. இந்த ஏஜெண்டுகள் தொழில்முறை வசைபாடுபவர்கள் என்று அழைக்கப்டுகின்றனர்.
இந்த OCDA நிறுவனம் தங்கள் கிளைன்ட்டுகள் சார்பில் ஏஜெண்டுகள் மேலதிகாரிகளிடம் பேசும் வீடியோ ஒன்று அண்மையில் வைரலானது. மேலும், இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்குச் சிறப்புத் தகுதிகள் இருக்க வேண்டுமாம்,
அதாவது, தங்கள் குழந்தைகளை அதிகம் திட்டிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் இதற்கு தாரலமாக விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதிலும், தனியாளாகக் குழந்தையை வளர்க்கும் சிங்கிள் பெற்றோராக இருந்தால் இன்னும் சிறப்பு என்று கூறப்படுகிறத்.
this guy is crazy😂 he kicked out the customer to diss the employee 1-on-1💀 this agent Ratliff OCDA nonsense can’t be real pic.twitter.com/rsDwAFnEUm
— Rhodes (@solonebiu) November 12, 2024