புதிய தலைமை செயலக அரசாணை ரத்து?
சென்னை பட்டினப்பாக்கத்தில் 1200 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தலைமை செயலகம் கட்ட திட்டமிடப்பட்ட நிலையில் அது ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை பட்டினப்பாக்கத்தில் 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமை செயலகம் கட்ட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், திமுக அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதற்கிடையே புதிய தலைமை செயலக கட்டுமானத்தை எதிர்த்து சுப்ரீம் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை மாவட்ட மீனவர்கள் சார்பில் 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அரசாணையை ரத்து செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் புதிய இடம் குறித்த விபரங்களுடன் அடுத்த அரசாணை வெளியாகலாம் என கூறப்படுகிறது.