ரூ.1200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமை செயலகம்
New Secretariat- Assembly Complex in Chennai: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதன் விபரம்
தற்போதைய தலைமை செயலகம் 2 கட்டடங்களில் இயங்கி வருகிறது, 2 கட்டடங்களில் 6000 பேர் பணியாற்றும் நிலை உள்ளது, புனித ஜார்ஜ் கோட்டை தமிழ்நாடு அரசின் நிர்வாக வரலாற்றின் பெருமைமிக்க அடையாளமாக விளங்கினாலும் தமிழ்நாட்டின் எதிர்கால நிர்வாக வளர்ச்சியை கருத்தில் கொண்டு 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமை செயலகம் அமைக்கப்படும். அனைத்து அரசு துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டு வந்து ஒருங்கிணைக்கப்படும். தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்று வர வசதிகள் செய்து தரப்படும்.
இளைஞர்களி்ன் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளை அறிந்து பயிற்சி அளிப்பதற்காக மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்கப்படும். இதன் மூலம் சுற்றுலா, சிறப்பு வாகன உற்பத்தி தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பட வாய்ப்புகள் உள்ளது.
தேசிய, உலக அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறும் வகையில் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும், இதில் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கான நவீன உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும்.

ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினருக்கு காலக்கெடு! உடல்கள் மட்டுமே நாடு திரும்பும் என எச்சரிக்கை IBC Tamil
கச்சத்தீவுக்கு பதிலாக இந்தியாவின் கைகளுக்கு சென்ற பெட்ரோலியம் வளமிக்க கடல் மேடை! போட்டுடைத்த காங்கிரஸ் IBC Tamil