அடுத்த வாரம் இந்தியா வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்

Samsung m32 Budget smartphones
By Petchi Avudaiappan Jun 15, 2021 03:03 PM GMT
Report

 சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 21 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 64 எம்பி குவாட் கேமரா சென்சார்கள், 20 எம்பி செல்பி கேமரா, 6000 எம்ஏஹெச் பேட்டரி, மீடியாடெக் ஹீலியோ பிராசஸர், 64 ஜிபி ரோம், 4 ஜிபி ரேம் ஆகிய வசதிகள் இடம் பெற்றுள்ளது.

புதிய சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் லைட் புளூ நிறங்களில் கிடைக்கும். இதன் விலை ரூ. 15 ஆயிரத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.