அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?
கொரோனா பரவல் குறித்து அனைத்துக்கட்சி உறுப்பினர்களுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். முழு ஊரடங்கை தீவிரப்படுத்த சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
நடைமுறைக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்:
ATM, பெட்ரோல் பங்குகள், மெடிக்கல், நாட்டு மருந்து கடைகள் வழக்கம் போல திறக்க அனுமதி .
காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நாளை முதல் செயல்பட அனுமதி இல்லை.
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படும்.
காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.
நாளை முதல் தமிழகத்தில் டீ கடைகள் இயங்க அனுமதி இல்லை.
மே. 17 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் கட்டாயம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடரும்.
E-Commerce நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி.
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறி, மளிகை போன்றவற்றை வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்கவும்; அதிக தூரம் பயணிக்க முற்படுபவர்கள் தடுக்கப்படுவார்கள்