கோவையில் நாளைமுதல் ஊரடங்கில் புதிய விதிமுறைகள்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Coimbatore Covid19 restrictions Shop openings regulations
By Irumporai Aug 01, 2021 02:55 AM GMT
Report

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.

அந்த வகையில்கோவையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால்நாளை முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கோவையில் முக்கிய சாலைகளில் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகள் ஞாயிற்றுக்கிழமையில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.