டாஸ்மாக்கில் மது வாங்க செல்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் - மது பிரியர்கள் அதிர்ச்சி
covid19
corona
tasmac
tngovt
டாஸ்மாக்
தமிழகஅரசு
By Petchi Avudaiappan
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டாஸ்மாக் மதுக் கடைகளில் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்துகொண்டே வரும் நிலையில் அதனை தடுக்க மாநில அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் டாஸ்மாக் கடைகளில் பின்பற்ற வேண்டிய தடுப்பு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அவை,
- டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு மது வழங்கப்படாது.
- ஒரே நேரத்தில் 5 நபர்கள் மட்டுமே மது வாங்க அனுமதிக்கப்படும்.
- அனைத்து மதுக்கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தவறாது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கையுறை, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
- இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி தூர சமூக இடைவெளி இருக்க வேண்டும்.
- கடைகளுக்கு முன் கூட்டமாக இருக்க கூடாது. கூட்டம் கூடினால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.