டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு : யூடியூபில் புதிய சாதனை படைத்த செல்ஃபி புள்ள பாடல்!

vijay selfie pullaa kathimovie
By Irumporai Jul 31, 2021 02:34 PM GMT
Report

நடிகர் விஜய் மற்றும் சமந்தா நடித்த கத்தி திரைப்படத்தில் இடம்பெற்ற செல்பி புள்ள பாடல் யூடியூப்பில் 10 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

நடிகர்கள் விஜய் மற்றும் சமந்தா நடித்து வெளியான திரைப்படம் கத்தி. 2014ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார்.

[

கிராமத்தின் தண்ணீர் வளத்தை அபகரிக்க முயலும் பெருநிறுவனத்துக்கு எதிராக மக்கள் போராடும் கதைக்களத்தை அடிப்படையாக கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

மேலும் இதில் இடம்பெற்ற செல்பி புள்ள பாடல் ரசிகர்களின் விருப்பமான பாடலாக இருந்து வந்தது.

இந்த நிலையில் யூடியூப்பில் வெளியான இந்தப் பாடல் இதுவரை 10 கோடி பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

10 கோடி பார்வைகளைக் கடந்ததைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.