குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு..!

Minister Announcement Tamilnadu NewRationShop
By Thahir Mar 21, 2022 04:23 PM GMT
Report

தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த முறை தமிழக சட்டப்பேரவையில், கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு ஐ பெரியசாமி பதிலளித்து பேசும்போது,

நியாய விலை கடைகளில் காலியாக உள்ள 3331 விற்பனையாளர்கள், 686 கட்டுநர்கள் காலிப் பணியிடங்களுக்கு ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பினை ரத்து செய்து,

1988ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகளை பின்பற்றியும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் பெற்றும் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்று நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.

அதன்படியே குறிப்பிட்ட பணியிடங்கள் ஒவ்வொன்றாக நிரப்பப்பட்டு வருகின்றன.. இந்நிலையில் திமுக அரசின் முதல் முழுமையான பட்ஜெட், சட்டப்பேரவையில், கடந்த 18ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், 2022 - 2023 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதையடுத்து, இன்று முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் போது திருப்பூர் மாவட்டத்தில் ரேசன் கடைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படுமா? என்று திருப்பூர் தெற்கு உறுப்பினர் செல்வராஜ் கேள்வி எழுப்பினார்.

கேள்விக்கு பதில் அளித்து பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,திருப்பூரில் நியாய விலைக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 1,000 அட்டை உள்ள நியாய விலைக் கடைகளை பிரிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

மேலும், 150 ரேசன் அட்டைகளுக்குப் பகுதி நேர கடைகளும், 200 ரேசன் அட்டைகளுக்கு மேல் இருந்தால் முழு நேரக் கடைகளும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

3 முழு நேர கடைகள், 7 பகுதி நேர கடைகள் திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே திருப்பூரில் தொடங்கப்பட்டுள்ளது.

நிதி நெருக்கடி இருப்பினும் தேவைப்படும் இடங்களில் மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் நியாயவிலைக் கடைகள் திறக்கப்படும்" என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பதில் அளித்தார்.