ரயில் டிக்கெட் புக்கிங்கில் முக்கிய மாற்றம் - அவசியம் தெரிஞ்சுக்கோங்க..
ரயில் டிக்கெட் புக்கிங்கில் புதிய நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
டிக்கெட் புக்கிங்
கடந்த 1-ம் தேதி முதல் ரயில்வே டிக்கெட் முறையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதன்படி வெயிட்டிங் லிஸ்ட் எனப்படும் காத்திருப்போர் டிக்கெட் வைத்திருப்போர் இரண்டாம் மற்றும் ஏசி வகுப்புகளில் கட்டாயம் பயணிக்க அனுமதிக்கமாட்டார்கள். கன்பர்ம் ஆகாத டிக்கெட்களை வைத்திருப்போர்,
முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணித்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்க, டிக்கெட் பரிசோதகர்களுக்கு அதிகாரம் உண்டு. வெயிட்டிங் டிக்கெட் வைத்திருப்போர், முன்பதிவு இல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.
புதிய நடைமுறை
மேலும், ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு, அந்த டிக்கெட்கள் வெயிட்டிங் லிஸ்டில் இருந்தால், தானாவே காலவதியாக, பயணிகளுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது.
அந்த முறை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து பயணிப்பவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை கவனத்தில் கொண்டு இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.