இனி கண்ணாடியே வேண்டாம்; சொட்டு மருந்து போட்டாலே போதும் - பளீச் பார்வை!
ரீடிங் கண்ணாடி தேவையை நீக்கக்கூடிய கண் சொட்டு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
பிரஸ்போபியா
பிரஸ்பியோபியா என்பது வயதானவர்களுக்கு இயல்பாகவே ஏற்படும் ஒரு குறைபாடு. இந்த பாதிப்பு இருப்போருக்கு அருகே உள்ள பொருட்களைத் தெளிவாகப் பார்க்க முடியாது.
புத்தகங்களைப் படிக்க சிரமம். இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த என்டோட் பார்மாசூட்டிகல்ஸ் என்ற நிறுவனம் பிரஸ்போபியா சிகிச்சைக்காக பிரஸ்வியூ (PresVu) என்ற கண் சொட்டு மருந்துகளை உருவாக்கியுள்ளது.
கண் சொட்டு மருந்து
இந்த மருத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அனுமதி அளித்துள்ளது. மேலும், மருந்து மற்றும் உற்பத்தி செயல்முறைக்குக் காப்புரிமை பெறவும் அந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. 40 வயதைத் தாண்டியவர்களின் கண்ணாடி தேவையைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் கண் சொட்டு மருந்து இதுதான் எனக் கூறப்படுகிறது.
இந்த கண் சொட்டு மருந்து கண்ணாடிகளின் தேவையை நீக்குவது மட்டுமின்றி, கண்கள் வறண்டு போகாமலும் பார்த்துக் கொள்கிறது. இன்னும் சில நாட்களில் இந்த கண் சொட்டு மருந்து ரூ.350க்கு விற்பனை செய்யப்படும்.
40 முதல் 55 வயதுடைய நபர்களுக்கு லேசான முதல் மிதமான பிரெஸ்பியோபியா இருந்தால் அதைக் குணப்படுத்த உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.