வருங்கால பிரதமர் என்று வாழ்த்திய காயத்ரி ரகுராம் : புதிய பதவி வழங்கிய அண்ணாமலை!

BJP K. Annamalai
By Sumathi Jun 13, 2022 12:02 AM GMT
Report

பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராமுக்கு வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவில் மாநில தலைவர் என்ற புதிய பொறுப்பு வழங்கப் பட்டிருக்கிறது.

காயத்ரி ரகுராம்

இதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவில் மாநில தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் தனக்கு கீழ் இருந்த நிர்வாகிகளை

வருங்கால பிரதமர் என்று வாழ்த்திய காயத்ரி ரகுராம் : புதிய பதவி வழங்கிய அண்ணாமலை! | New Post For Gayatri Raghuram

தலைமையின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டு கட்சியில் இருந்து நீக்கினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

புதிய பொறுப்பு

தலைமையின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக தனக்கு கீழ் இருந்த நிர்வாகிகளை காயத்ரி ரகுராம் நீக்கியதால் அவர் கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்டு வந்த நிலையில்,

வருங்கால பிரதமர் என்று வாழ்த்திய காயத்ரி ரகுராம் : புதிய பதவி வழங்கிய அண்ணாமலை! | New Post For Gayatri Raghuram

அண்மையில் அறிவிக்கப்பட்ட தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலில் காயத்ரி ரகுராம் பெயர் இடம்பெறவில்லை. அவர் வகித்து வந்த பொறுப்பை பெப்சி சிவாவுக்கு வழங்கியிருந்தார் அண்ணாமலை.

இதனால் கடுப்பான காயத்ரி ரகுராம், எனது ஒரே தலைவர் பிரதமர் நரேந்திர மோடி ஜி தான் என்று சொல்லியிருந்தார்.

அண்மையில் அண்ணாமலையின் பிறந்த தினம் வந்தபோது, அவருக்கு வாழ்த்து சொல்லும் சாக்கில் வஞ்சப் புகழ்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் காயத்ரி ரகுராம்.

வருங்கால பிரதமர், வருங்கால முதல்வர்,வருங்கால மத்திய அமைச்சர், வருங்கால எம்பி , வருங்கால எம்எல்ஏ என்று கடுப்பில் கூறியிருந்தார்.

இது பாஜகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் காயத்ரி ரகுராமுக்கு புதிய பொறுப்பு வழங்கிய அறிவித்திருக்கிறார் அண்ணாமலை.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவில் மாநில தலைவராக காயத்ரி ரகுராம் நியமிக்கப்படுகிறார். அவரது பணி சிறக்க வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருக்கிறார்.