முன்னாள் நீதிபதி தலைமையில் புதிய காவல் ஆணையம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ministerstalin
newpolicecommission
By Irumporai
சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.
போலீஸ் - மக்கள் இடையேயான உறவை மேம்படுத்தவும், போலீசுக்கு புதிய பயிற்சி முறைகளை பரிந்துரைக்கவும் சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
காவல்துறை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்தவும் ஆணையம் பரிந்துரை வழங்கும். ஐஏஎஸ் அதிகாரி (ஓய்வு) அலாவுதீன், ஐபிஎஸ் அதிகாரி (ஓய்வு) ராதாகிருஷ்ணன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.