கிளப்ஹவுஸில் புதிய வசதி அறிமுகம்...!

Club House New update
By Petchi Avudaiappan Jul 15, 2021 05:49 PM GMT
Report

கிளப்ஹவுஸ் செயலியில் பயனாளிகள் தகவல்களை எழுத்து வடிவில் பரிமாறிக்கொள்வதற்கான மெசேஜிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கிளப்ஹவுஸில் புதிய வசதி அறிமுகம்...! | New Messaging Facilities Introduce In Club House

சமீப காலமாக சமூக வலைத்தள ஆடியோ சேவையாக கவனத்தை ஈர்த்திருக்கும் கிளப்ஹவுஸ் செயலி இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. அதேசமயம் அதன் பிரைவசி மீறல் அம்சங்களுக்காக சர்ச்சைக்குறியதாகவும் இருக்கிறது.

அதேநேரத்தில், ஆடியோ சேவை என்றாலும், பயனாளிகள் மெசேஜிங் மூலம் கருத்து பரிமாற்றத்தில் ஈடுபட வழியில்லாதது இந்த சேவையின் முக்கிய குறைபாடாக கருதப்பட்டது. இந்நிலையில் மெசேஜிங் வசதியை 'பேக் சேனல்' எனும் பெயரில் கிளப்ஹவுஸ் அறிமுகம் செய்துள்ளது.

பேக் சேனல் வசதி மூலம், கிளப்ஹவுஸ் பயனாளிகள் ஒருவருக்கு ஒருவர் செய்தி அனுப்பிக்கொள்ளலாம். குழு செய்திகளையும் அனுப்பலாம். இணைப்புகளையும் பகிரலாம் என்றாலும், புகைப்படம் அல்லது வீடியோவை பகிர முடியாது.