திருமணமான இரண்டே மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுமாப்பிள்ளை! நடந்தது என்ன?

death suicide tirupur new married man darapuram
By Anupriyamkumaresan Jul 28, 2021 04:04 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

திருப்பூர் அருகே திருமணமான 2 மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார், பொள்ளாச்சியில் உள்ள காபி பார் ஒன்றில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார்.

திருமணமான இரண்டே மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுமாப்பிள்ளை! நடந்தது என்ன? | New Married Man Suicide Police Enquiry

இவருக்கும் திண்டுக்கல்லை சேர்ந்த முனீஸ்வரி என்ற 19 வயது பெண்ணுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.சதீஷ்குமார் – முனீஸ்வரி தம்பதி கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளனர்.

இந்த சூழலில் நேற்று சதீஷ்குமார் தனது அறையை விட்டு நீண்ட நேரமாக வெளியில் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து சென்று உள்ளே பார்த்த போது, தூங்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

திருமணமான இரண்டே மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுமாப்பிள்ளை! நடந்தது என்ன? | New Married Man Suicide Police Enquiry

இதனை கண்டு அதிர்ச்சியைடைந்த உறவினர்கள் காவல்நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.