வங்கக்கடலில் அடுத்த வாரம் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை மையம்

Cyclone Heavy Rain
By Yashini Nov 06, 2026 09:57 AM GMT
Report

New low pressure area to form in the bay of bengal- வங்கக்கடலில் வருகிற 13ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்திய வானிலை ஆய்வு கூறுகையில்..,

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 13ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில் வங்கக்கடலில் கடந்த வாரத்தில் அர்னாப் புயல் மற்றும் முரசு புயல் உருவாகி ஆந்திரா நோக்கி கடந்து சென்றது.

இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 13ஆம் தேதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கக்கடலில் அடுத்த வாரம் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை மையம் | New Low Pressure Area To Form In The Bay Of Bengal

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக வலுப்பெறும் என்றும் புயலாக உருவாகுமா என்பதை வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது.

இதற்கிடையில் தமிழகத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வரை அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.