வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - வானிலை மையம் எச்சரிக்கை!

Tamil nadu Cyclone
By Vinoja Nov 29, 2026 12:45 PM GMT
Report

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (30) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு மற்றும் இலங்கை கடற்கரையை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - வானிலை மையம் எச்சரிக்கை! | New Low Pressure Area Likely Over Bay Of Bengal

தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இதற்கிடையில், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏனைய தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.