ஐபிஎல் செய்திகளை வெளியிட மாட்டோம்: பிரபல செய்தி நிறுவனம் துணிச்சல் முடிவு

India Corona IPL Gilchrist
By mohanelango Apr 25, 2021 04:54 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா பரவல் நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக 3 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகளும் 2500-க்கும் அதிகமான மரணங்களும் பதிவாகி வருகின்றன.

கொரோனாவின் இரண்டாம் அலை மே மாதத்தின் இறுதியில் தான் புதிய உச்சத்தை தொடும் என்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளைத் தொடர்ந்து நடத்துவது குறித்து பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் இந்த நேரத்தில் ஐபிஎல்-ஐ நடத்துவது சரியாக இருக்குமா அல்லது பொழுதுபோக்கிற்கு அவசியமா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இன்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஐபிஎல் தொடர்பான செய்திகளை வெளியிட மாட்டோம் எனத் தெரிவ்த்துள்ளது.

கொரோனா பேரிடர் தீவிரமாக உள்ள நிலையில் ஐபிஎல் தொடர்பாக செய்திகளை வெளியிடுவது சரியாக இருக்காது. உண்மையான பிரச்சனைகளுக்கு அந்த முக்கியத்துவத்தை கொடுக்கப்போகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.