நேக்கு கல்யாண வயசு தான் வந்துடுத்து டி - 90s Kid-ன் புதிய ஐடியா !

kerala 90skids
By Irumporai Sep 01, 2021 12:19 PM GMT
Report

தன்னோட்ட வாழ்க்கையில கல்யாணம் என்பது பெரும் கனவா நினைச்சு வாழ்ந்துகிட்டு இருக்கும் 90 s kids  மத்தியில  தன்னோடு புதிய ஐடியா மூலமாக தற்போது இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகின்றார் ஒரு 90 - கிட்ஸ் வாருங்கள் அவரை பற்றி தெரிந்து கொள்வோம்.

கேரள மாநிலம் திரிசூர் மாவட்டம் வல்லசிரா பகுதியைச் சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன். 33 வயதான இவர் தன் திருமணத்திற்கு பெண் பார்க்க எந்த தரகர்களையும் நாடவில்லை.

தனது சிறிய தேநீர் கடையின் முகப்பில், ஒரு அட்டையை தொங்கவிட்டுள்ளார். அதில், வேலைக்கு ஆள்கள் தேவை கடை வாடகைக்கு உள்ளது'என்பது போன்ற வாசகங்கள் இடம்பெறவில்லை. மாறாக, வாழ்க்கைத் துணை தேவை. ஜாதி, மதம் கட்டாயமில்லை' என, எழுதி அதில் அவரது மொபைல்போன் எண்ணையும் எழுதி வைத்துள்ளார்.

இந்த படத்தை அவரது நண்பர்களின் சமூக வலைத்தள பக்கங்களிலும் பகிர தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இதுகுறித்து உன்னிகிருஷ்ணன் கூறும் போது  நான் என் வீட்டுக்கு அருகே ஒரு லாட்டரி கடையும், தேனீர் கடையும் நடத்தி வருகிறேன்.

தற்போது திருமணம் செய்ய விரும்புகிறேன். தரகர்களையோ, திருமண தகவல் மையங்களையே நாட எனக்கு விரும்பவில்லை. எனக்காக எனது நண்பர்களும் அவரது குடும்பத்தினரும் மணப்பெண்ணைத் தேடி வருகிறார்கள். ஆனால் எங்கும் அமையவில்லை.

ஆகவே இப்படி ஒரு விளம்பரத்தை செய்ய முடிவு செய்தேன். விளம்பரத்தைப் பார்த்து மலேசியா, ஆஸ்திரேலியா, பிரிட்டனிலிருந்து எல்லாம் எனக்கு திருமண விண்ணப்பங்கள் வந்துள்ளன. எனக்கு வரும் அழைப்புகளுக்கு பதில் சொல்லக் கூட நேரமில்லாமல் போய்விட்டது. இவ்வாறு  கூறியுள்ளார்.

ஆகவே  கூடிய சீக்கிரம் உன்னிகிருஷ்ணன் திருமண பந்தத்தில் இணைய போகின்றார் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை , யார் கண்டது உன்னி கிருஷ்ணனின் இந்த முறையே நடை முறைக்கு வரலாம் என புலம்புகின்றனர் அப்பாவி 90 s kids சிலர்.