ஜென்டில்மேன்-2 படத்தில் இணைந்த அடுத்த ஹீரோயின் - புது அப்டேட்டால் கடுப்பான ரசிகர்கள்

Gentleman2 ஜென்டில்மேன்2 ജെന്റിൽമാൻ2 mmkeeravaani ಜಂಟಲ್ಮನ್2 #జెంటిల్మాన్2 PriyaaLal KTKunjumon
By Petchi Avudaiappan Apr 13, 2022 08:52 PM GMT
Report

ஜென்டில்மேன்-2 படத்தின் 2வது ஹீரோயின் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது. 

கடந்த 1993 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்குநராக அறிமுகமான படம் ஜென்டில்மேன். இந்த படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் மதுபாலா, கவுண்டமணி, செந்தில், வினித், மனோரமா என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படத்தை கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார்.

அந்த காலக்கட்டத்தில் இந்தப் படம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இதனிடையே கிட்டதட்ட 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போவதாக தயாரிப்பாளர் குஞ்சுமோன் சமீபத்தில் அறிவித்தார். இந்த படத்தையும் ஷங்கர் தான் இயக்கப்போகிறாரோ என்ற கேள்வி எழுந்த நிலையில், முதல்முறையாக படத்தின் இசையமைப்பாளர் பற்றி அப்டேட் வந்தது.

அதன்படி பாகுபலி, ஆர் ஆர் ஆர் படங்களின் இசையமைப்பாளர் கீரவாணி தான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதிலாக இதில் இடம்பெற்றார். இதனைத் தொடர்ந்து படத்தின் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் பரவியது. ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கும் விதமாக தன்னை தவிர அனைவரும் புதிது என கே.டி.குஞ்சுமோன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் எதிர்பார்த்தது போலவே படத்தின் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கவுள்ளார். அதாவது நயன்தாரா சக்கரவர்த்தி என்பவர் தான் ஹீரோயின் என கே.டி.குஞ்சுமோன் அறிவித்தார். இதனைத் தவிர படத்தில் மற்றொரு ஹீரோயினும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்  படத்தின் 2வது ஹீரோயின் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

தமிழில் ஜீனியஸ் என்ற படத்தில் நடித்துள்ள தெலுங்கு, மலையாள நடிகையான பிரியா லால் தான் அந்த புது நாயகி என தெரிவிக்கப்பட்டுள்ளது.