வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு 7 நாட்கள் தனிமை கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு

new guidelines international passengers india covid protocols
By Swetha Subash Jan 07, 2022 11:17 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

இந்தியாவில் கடந்த சில வாரமாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது , அதோடு ஒமைக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருகின்றன.

ஒமைக்ரான் பரவல் அதிகரித்ததன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி : வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுதல் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு விமானம் மற்றும் கப்பல் மூலம் இந்தியா வருவோருக்கு பொருந்தும் என இந்திய விமானப்போகுவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய சுகாதரத்துறை தெரிவித்திருக்கிறது.

மேலும். இந்த நடைமுறை ஜனவரி -11 தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, 7 நாட்கள் தனிமைபடுத்திக்கொள்ளும் பயணிகள் சுய தனிமை முடிந்த பிறகு RTPCR சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.