இன்று முதல் அமலுக்கு வரும் FASTag புதிய விதிகள் - மீறினால் இதுதான் தண்டனை!
இன்று முதல் அமலுக்கு வரும் FASTag புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளது.
FASTag
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் 'பாஸ்டேக்' முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. வாகனங்கள் சுங்கச் சாவடியை அடைவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு பாஸ்டேக் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டிருந்தாலோ, குறைந்த இருப்பைக் கொண்டிருந்தாலோ சுங்கச் சாவடியில் பணப்பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்.
ஸ்கேன் செய்யப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு பாஸ்டேக், ப்ளாக்லிஸ்ட் செய்யப்பட்டால் பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். FASTag ஸ்கேன் செய்யப்படுவதற்கு 60 நிமிடங்களுக்கு முன்பு தடுப்புப்பட்டியலில் இருந்தால், கட்டணம் செலுத்தப்படாது.
பாஸ்டேக் இந்த இரண்டு நிபந்தனைகளையுமே பூர்த்தி செய்யவில்லை என்றால் "எரர் கோட் 176" உடன் பரிவர்த்தனை ரத்து செய்யப்படும். இது போன்ற வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தை விட 2 மடங்கு அபராதம் விதிக்கப்படும்.
புதிய விதி
எனவே பயணங்களைத் தொடங்குவதற்கு முன்பே பாஸ்டேக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை ரூ. 100 உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். FASTag இருப்பு கொண்ட வாகனங்கள் சுங்கச்சாவடி வழியாக செல்ல அனுமதிக்கப்படும்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பாதுகாப்பு வைப்புத்தொகையிலிருந்து சுங்கக் கட்டணம் கழிக்கப்படும். செக்யூரிட்டி டெபாசிட்டில் இருந்து ஏதேனும் விலக்குகள் இருந்தால் அடுத்த ரீசார்ஜ் செய்யும்போது திருப்பி அளிக்கப்படும்.