புதிய கல்விக் கொள்கை கூட்டத்தில் பங்கேற்காதற்கு காரணம் இதுதான்: விளக்கம் கொடுத்த அமைச்சர்

minister tamilnadu educationpolicy
By Irumporai May 17, 2021 10:27 AM GMT
Report

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் அனைத்து மாநிலக் கல்விச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மத்தியக் கல்வி அமைச் சருக்கு அனுப்பிய கடிதத்தில்:

இந்தக் கூட்டத்தை அமைச்சர்கள் மட்டத்தில் நடத்த வேண்டும் என்றும். புதிய கல்விக் கொள்கை குறித்த தனது கருத்துகளை கூற இருப்பதாக அவர் கூறியிருந்தார்.

அதற்கு மத்திய அரசிடம் பதில் வராததால், அதில் தமிழக அரசு பங்கேற்கவில்லை.

இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மத்திய கல்வி அமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில், கல்வி அமைச்சருக்கு அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் வராததால், தமிழக அரசு பங்கேற்கவில்லை என்றார்.

மேலும் மத்திய அரசு ,மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.