புதிய டிஜிபி சைலேந்திரபாபு - சமூக அமைதியை நிலைநாட்ட சீமான் வாழ்த்து!
தமிழ்நாடு காவல்துறையின் புதிய தலைமை இயக்குநராக சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டிருப்பதற்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து கூறியுள்ளார்.
தமிழக காவல்துறையின் 30வது சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக இன்று சைலேந்திர பாபு பதவியேற்று கொண்டார் . சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புதிய டிஜிபி சைலேந்திரபாபுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார் திரிபாதி.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாடு காவல்துறையின் புதிய தலைமை இயக்குனராக ஐயா சைலேந்திரபாபு அவர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கும் செய்தி அறிந்து மகிழ்கின்றேன் என்றும் தகுதியும், திறமையும் கொண்டு அர்ப்பணிப்பு உணர்வோடு அயராது பணியாற்றி தனது சீரிய செயல்பாடுகளின் மூலம், இளைய தலைமுறையினரின் மனம் கவர்ந்த முனைவர் சைலேந்திரபாபு அவர்களை இப்பொறுப்புக்கு தேர்வு செய்திருப்பது மிகப் பொருத்தமானதாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவரது பணிகள் சிறக்கவும் சட்டம் ஒழுங்கை சிறப்பான முறையில் பேணிக்காத்து சமூக அமைதியை நிலைநாட்டவும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காவல்துறையின் புதிய தலைமை இயக்குநராக ஐயா சைலேந்திரபாபு அவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கும் செய்தியறிந்து மகிழ்வுற்றேன்.
— சீமான் (@SeemanOfficial) June 30, 2021
அவரது பணிகள் சிறக்கவும், சட்டம் ஒழுங்கைச் சிறப்பான முறையில் பேணிகாத்து சமூக அமைதியை நிலைநாட்டவும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்! pic.twitter.com/hzQ7hlYt8s