வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
india
rain
tamilnadu
Karaikal
By Jon
தமிழகத்தில் ஓரீரு நாட்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக தெளிவாகக் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தென்கிழக்கு ,தெற்கு அந்தமான் அருகே வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.வளிமண்டல சுழற்சி இரண்டு நாளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும்.