பங்கு சந்தை - செபி அதிரடி முடிவு
மாற்று முதலீடு கொள்கை தொடர்பான ஆலோசனைக் குழுவை இந்திய பங்குச் ச்நதை கட்டுப்பாட்டு அமைப்பான செபி மாற்றி அமைத்துள்ளது.
செபி (SEBI) என்று அறியப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் இந்தியாவில் பங்குச் சந்தைகள், நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பாகும்.
மும்பை நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இவ்வமைப்பு 1988ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
தற்போது மாற்று முதலீடு கொள்கை தொடர்பான ஆலோசனை குழுவை செபி மாற்றி அமைத்துள்ளது.
20 உறுப்பினர்களைக் கொண்ட இந்த குழுவின் தலைவராக இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி செயல்படுவார் என்றும்,
மத்திய நிதியமைச்சகம், செபி, மாற்று முதலீட்டு துறை நிறுவனங்களைச் ச்சார்ந்தவர்கள் உறுப்பினர்களாக இடம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.