தமிழகத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா தொற்று..!

COVID-19
By Thahir May 01, 2022 08:15 PM GMT
Report

தமிழகத்தில் நேற்று 47 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் நேற்று 18,460 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 47 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனையில் 514 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 34,15,440 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு 38,025 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மேலும் சென்னையில் நேற்று அதிகபட்சமாக 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.