இந்தியாவில் புதிதாக 16,464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!
இந்தியாவில் புதிதாக 16,464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் தினசரி கொரோன தொற்றின் பாதிப்பு 16,464 - ஆக உயர்ந்துள்ளது .
கொரோனா தொற்று அதிகரிப்பு
கொரோனா தொற்றின் மொத்த பாதிப்பு 4,40,36,275 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்தியாவில் தொற்று நிலவரம் 1,43,989 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது இறப்பு விகிதம் என்பது 5,26,396 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்த தினசரி பாதிப்பில் இருந்து 0.33 விழுக்காடு குறைந்துள்ளதாகவும்.

மாநிலத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 98.48 விழுக்காடு பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினசரி தொற்று நிலவரம் 6.01 சதவீதமாகவும் வார இறுதி நாட்களில் 4.08 சதவீதமாகவும் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து 4,33,65,890 பேர் குணமடைந்துள்ளதாகவும் மற்றும் இறப்பு விகிதம் 1.20 விகிதமாக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது 204.34 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுதப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது . நேற்று மாநிலத்தில் 39 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.