தமிழகத்தில் புதிதாக 2,671 பேருக்கு கொரோனா தொற்று..!
COVID-19
By Thahir
தமிழகத்தில் நேற்று கொரோனாவால் புதிதாக 2,671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக 2,671 பேருக்கு தொற்று
தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை 2,722 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 2,671 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 844 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இதனால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 18,842 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 2,516 குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.
ஷானி அபேசேகரவின் சிறப்பு அறிக்கை! பாதுகாப்பு அச்சத்தில் சிறையை சுற்றி கூச்சலிடும் உறவினர்கள்! IBC Tamil
அரசியல் பேரங்களை அம்பலப்படுத்தியதால் சுட்டுக் கொல்லப்பட்ட சாட்சிகள்! நீர்கொழும்பு சிறையிலும் 20 துப்பாக்கிச் சூடு IBC Tamil