புதிய கொரோனாதடுப்பூசி - எலிகளுக்கு செலுத்தியதில் நல்ல பலன்!

Vaccine coronavirus mouse
By Irumporai Jun 24, 2021 02:11 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

புதிய உலகளாவிய கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர்.

அதனை, எலிகளுக்கு செலுத்தி சோதித்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் திரிபு காரணமாக  உலக நாடுகள் எல்லாம் தடுப்பூசியை உருவாக்குவாதில் போட்டி போட்டு செயல்படுகின்றன,

இப்போது வரை எதிர்க்கும் திறன் உள்ள தடுப்பூசிதான் உருவாக்கப்பட்டுள்ளதே தவிர குணப்படுத்தும் தடுப்பூசி உருவாக்கப்படவில்லை.

இந்த நிலையில் உலகளாவிய தடுப்பூசி ஒன்றை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது. இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவில் உள்ள வட கரோலினா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்தான் இந்த தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர்.

இவர்கள், எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய்களைத் தடுப்பதற்கும்  தற்போதைய கொரோனா வைரஸ் மற்றும் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் கொரோனை வைரஸ் திரிபினை அழிக்கும் வகையில் தடுப்பூசியை வடிவமைத்துள்ளதாக கூறி உள்ளனர்.


இது குறித்த பிரபல சயின்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தி குறிப்பில்:


இந்த aஅய்வினை விஞ்ஞானிகள் மெசேஞ்சர் ஆர்.என்.ஏ. தடுப்புடன் தங்கள் அணுகுமுறையை தொடங்கினர். இது பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசி போன்றதாகும்.

ஆனால் இதில்  வைரசின்  ஆர்.என்.ஏ. குறியீட்டைச் சேர்ப்பதற்கு பதிலாக, பல வைரஸ்களின் மெசேஞ்சர் ஆர்.என்.ஏ.க்களை சேர்த்து எலிகளுக்கு இந்த கலப்பின தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அவை எலிகளுக்கு ஆண்டிபடிகளை உருவாக்கியுள்ளதை கண்டறிந்தோம் வரும் ஆணடுகளில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும்.

இந்த சோதனை வெற்றி அடைந்தால் எதிர்காலத்தில் வைரசிடமிருந்து மனிதர்களை காக்க கேடயமாக இந்த தடுப்பூசி இருக்கும் என கூறியுள்ளனர்.