மிரட்டும் ஒமைக்ரான் - புதிய கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு
தமிழ்நாட்டில் புதிதாக 74 பேருக்கு உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மாநிலத்தில் ஒமைக்ரான் மொத்த பாதிப்பு 120 ஆக அதிகரித்துள்ளது . இந்த நிலையில், ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது
ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி
1ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஜனவரி 10-ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் கிடையாது அனைத்து பொருட்காட்சி மற்றும் புத்தகக் காட்சிகள் தற்போதைக்கு ஒத்திவைப்பு
9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தொடர்ந்து செயல்படும்
வழிபாட்டுத் தலங்களில் தற்போதைய நடைமுறையே தொடரும்
உணவகங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து சாப்பிட அனுமதி
திருமணம் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு 50 பேர் மட்டுமே அனுமதி .