அன்னபூரணி பெயரை பார்த்தாலே என்ன நடக்கும் தெரியுமா? - அதிர வைக்கும் சம்பவம்
சமூகவலைத்தளத்தில் வைரலான பெண் சாமியார் அன்னபூரணி மீண்டும் ஆன்மீக சர்ச்சை பேச்சுகளை பேச தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய பெண் சாமியாரான அன்னபூரணி அரசு தனி ஆசிரமம் தொடங்கி ,தனி தனி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றார். தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு, பொதுமக்கள் பக்தி பரவசத்தில், பூஜை செய்யும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.
காவி ஆடையை உடுத்திக்கொண்டு கோவிலுக்கு செல்வது போன்றவை சன்னியாசம் இல்லை என்று கூறி அதிர வைத்தார். கடந்த மூன்று மாதங்களாக ட்ரெண்டிங்கில் இல்லாமல் இருந்த அன்னபூரணி அரசு மீண்டும் புதிய வீடியோக்கள் மூலமாக களத்தில் இறங்கியுள்ளார்.
பெண் சாமியார் அன்னபூரணி அரசுவின் ஆன்மீக வகுப்பில் பங்கேற்ற நபர் ஒருவர் சார்ஜ் இல்லாமல் நின்ற இ-பைக் அன்னபூரணி அம்மா பெயரை பார்த்ததும் நிற்காமல் ஓடியது. எல்லையில்லா ஆனந்தத்தை உணர்ந்தேன் என்று கூற அவரது சீடர்கள் மகிழ்ச்சியடைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனைப் பார்த்த இணையவாசிகள் அன்னபூரணி அரசுவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.