375 ஆண்டுகள் மறைந்திருந்த மர்மம்...உலகத்தின் 8-வது கண்டம் கண்டுபிடிப்பு!!
உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்து, அக்கண்டம் 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாகவும் தெரிவித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
Zealandia
உலகில் தற்போது வரை 7 கண்டங்களே இருந்தன. ஆசியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா. அண்டார்டிகா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா ஆகும். இதுவே உலகின் மக்களுக்கு அறிந்திருந்த நிலையில், தற்போது புதிய கண்டம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டத்திற்கு விஞ்ஞானிகள் ஜீலந்தியா (Zealandia) என்று பெயரிட்டுள்ளனர். நியூசிலாந்துக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள இக்கண்டத்தின் 94 சதவீத பகுதி நீருக்கு அடியில் மூழ்கியுள்ளது.
49 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது
மொத்தமாக 49 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இக்கண்டம் நியூசிலாந்தை போல சிறிய சிறியு தீவுகளாக உள்ளதாக தெரிவிக்கின்றனர். பாறை மாதிரிகள் சிலவற்றை ஆய்வு செய்த அறிவியலாளர்கள், இந்த கண்டம் 375 ஆண்டுகளாக நீருக்குள் மறைந்திருந்ததாக குறிப்பிட்டு இது மடகாஸ்கர் தீவை காட்டிலும் 6 மடங்கு பெரியது என தெரிவித்துள்ளனர்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இக்கண்டமானது விரைவில் அதிகாரபூர்வமாக அங்கிகாரம் வழங்கப்பட்டு உலகின் 8-வது கண்டமாக அறிவிக்கப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.