தமிழகத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு புதிய கட்டணம்!

tamilnadu ambulance
By Irumporai May 14, 2021 12:04 PM GMT
Report

தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.

தமிழகத்தில் நோயாளிகளை அழைத்துச் செல்லும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு கட்டணத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சாதாரண ஆம்புலன்ஸ்களில் முதல் 10 கிலோ மீட்டருக்கு 1500 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டருக்கு பிறகு கிலோ மீட்டருக்கு ரூ 25 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் வசதி உள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு 10 கிலோ மீட்டர் வரை 2000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். அதற்கு பிறகு கிலோ மீட்டருக்கு 50 ரூபாய் வசூலிக்கப்படும்.

வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்களில் 10 கிலோ மீட்டர் வரை 4000 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

10 கிலோ மீட்டருக்குப் பிறகு ரூ 100 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.