மதுரை, நெல்லை, தஞ்சையில் புதிய பேருந்து நிலையங்களை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்
By Fathima
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை, நெல்லை, தஞ்சையில் புதிய பேருந்து நிலையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
நெல்லையில் ரூ.110.09 கோடி மதிப்பிலான 12 திட்ட பணிகளை திறந்து வைத்தார். ரூ.66 கோடி புதிய பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார்.
தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர் கே.என்.நேரு, துரைமுருகன், ஏ.வ.வேலு பங்கேற்றனர்.