தீயணைப்புத்துறை வீரவணக்க நினைவு சின்னத்தை திறந்து வைத்தார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலமாக பல்வேறு துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் திட்டங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள்,ஓட்டுநர் உரிமத்தின் நேரடி தொடர்பில்லாத செவைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் வீரவணக்க நினைவுச் சின்னத்தை திறந்து வைத்தார். பணியின் போது வீரமணம் அடைந்த வீரர்களை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 14- ஆம் தேதி நீத்தார் நினைவு தினமாக தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
பணியின் போது வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குநரக வளாகத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அதே போல உள்துறை சார்பில் 66 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 273 காவலர் குடியிருப்புகள்,11 காவல் நிலையங்கள்,3 காவல்துறை கட்டிடங்கள்,18 சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணியாளர்களுக்கான குடியிருப்புகளை காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.