புதிய கட்டங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

M. K. Stalin
By Thahir Apr 26, 2022 04:42 AM GMT
Report

சென்னை தலைமைசெயலகத்தில் வணிக வரித்துறை கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இராமநாதபுரம் முதுகுளத்துாரில் 75 ரூபாய் செலவிலும்,துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் ரூ.1 கோடியே 19 லட்சம் செலவில் கட்டப்பட்ட வணிக வரித்துறை புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதையடுத்து விருதுநகர் பதிவு மாவட்டம் வீரசோழன்,கும்பகோணம் பதிவு மாவட்டம் நாச்சியார் கோவில்,பட்டுக்கோட்டை பதிவு மாவட்டம் உள்ளிக்கோட்டை ஆகியவை 4 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4 சார்பதிவாளர் கட்டிடங்கள்,

காரைக்குடியில் 2 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மாவட்ட பதிவாளர் கட்டிடம் என சுமார் 8 கோடியே 16 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வணிகவரி மற்றும் பதிவுத்துறை கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இதில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.