நீதிமன்ற விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி,முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்பு..!
சென்னையில் நடைபெறும் நீதிமன்ற விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சேமநல நிதி வழங்குதல், சென்னை எழுப்பூரில் கட்டப்பட்ட வணிக ரீதியிலான நீதிமன்றங்களின் திறப்பு விழா நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
உயர்நீதிமன்றத்தின் நிர்வாக பயன்பாட்டிற்காக 9 மாடி கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுகிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா.
மேலும் நாமக்கல்,விழுப்புரம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றங்களையும் திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சி சென்னை உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள்,சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,தலைமை செயலாளர் மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.