கைக்குழந்தைக்கு திடீரென முளைத்த வால்; சிகிச்சை செய்ய மறுத்த மருத்துவர்கள் - என்ன காரணம்?
பிறந்த 5 மாத குழந்தைக்கு முதுகில் வால் போன்ற அமைப்பு தோன்றியது அதிர்ச்சி அளித்துள்ளது.
கைக்குழந்தை
சீனாவில் உள்ள ஹாங்சோ என்னும் மருத்துவமனையில் அனுமதியான பெண் ஒருவருக்கு, கடந்த 5 மாதங்களுக்கு முன்ஆன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது . அந்த குழந்தை பிறந்து சில நாட்கள் கடந்த நிலையில், திடீரென முதுகுத்தண்டு பகுதியில் வால் போன்ற அமைப்பு தோன்றி இருக்கிறது.
பதறிப்போன பெற்றோர்கள் உடனே மருத்துவமனையில் உள்ள மருத்துவரை தொடர்பு கொண்டனர், குழந்தையை பரிசோதனை செய்த நரம்பியல் துறை அறுவை சிகிச்சை துணைத்தலைவர் மருத்துவர் லி, நோயை கண்டறியா அந்த வால் போன்ற அமைப்பை எம்.ஆர்.ஐ ஸ்கேன் வாயிலாக சோதனை செய்தார்.
மறுத்த மருத்துவர்கள்
அந்த அமைப்பு எலும்பே இல்லாத 10 செ.மி. நீளம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். தண்டுவடத்தை சுற்றி இருக்கும் திசுக்களுடன் காணப்படும் இந்த வால் போன்ற அமைப்பை உடனடியாக அகற்ற முடியாது என்று மருத்துவர் கூறியுள்ளனர்.
அப்படி செய்தால் குழந்தையின் எதிர்காலத்தில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்த கூடும். எனவே, சிறுவனுக்கு உரிய வயதாகிய பின்னரே அறுவை சிகிச்சை செய்து அதனை அகற்றலாம் என தெரிவித்துள்ளனர்.
கடந்த 214 அம ஆண்டு இதேபோன்ற சம்பவம் ஏற்பட்டபோது தாய் அறுவை சிகிச்சைக்கு தயாராக இருப்பினும் மருத்துவ நிலைப்படி அதற்கு தற்போது அனுமதி இல்லை என்று மருத்துவர்கள் மறுத்ததாக அவர் குறிப்பிட்டார்.