புதிய பாஜக மாநில தலைவர்கள் நியமனம் - ஜே.பி நட்டா அறிவிப்பு
தெலுங்கானா, ஆந்திரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு புதிய பாஜக மாநில தலைவர்களை நியமனம் செய்து ஜே.பி.நட்டா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
புதிய பாஜக மாநில தலைவர்கள் நியமனம்
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெலுங்கானா மாநில பாஜக தலைவராக மத்திய அமைச்சர் கிஷ ரெட்டியை நியமித்துள்ளார்.
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் கிஷன் ரெட்டி, தெலுங்கானா மாநில பாஜக தலைவராகவும், ஜார்கண்ட் மாநில எதிர்கட்சித்தலைவராக இருக்கும் பாபுலால் மராண்டி அம்மாநில பாஜக தலைவராகவும், ஆந்திர மாநில பாஜக தலைவராக புரந்தேஸ்வரியும் நியமனம் செய்யப்பட்டு ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பாஜகவின் இந்த நடவடிக்கைகளால் மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் பஞ்சாப் மாநிலத்திற்கு பாஜக தலைவராக சுனில் ஜாக்கர் நியமிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.