மாறப்போகும் ஏடிஎம் புதிய விதிகள் - அவசியம் தெரிஞ்சுக்கோங்க..
மே 1 முதல் ஏடிஎம் புதிய விதிகள் அமல்படுத்தப்படவுள்ளது.
ஏடிஎம் புதிய விதி
ஏ.டி.எம்.களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அந்தவகையில் 75 சதவீத ஏ.டி.எம்.களில் வருகிற செப்டம்பர் 30-ந்தேதிக்குள்
குறைந்தபட்சம் ஒரு அறையிலாவது மேற்படி நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஏ.டி.எம்.களிலும் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் இந்த முறை உறுதி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் பெறக்கூடிய இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு மூன்று இலவச பரிவர்த்தனைகளைப் பெறலாம். பிற நகரங்களில் மாதத்திற்கு ஐந்து இலவச பரிவர்த்தனைகள் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
தங்கள் மாதாந்திர இலவச பரிவர்த்தனை வரம்புகளை மீறினால், வங்கிகள் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.23 வசூலிக்க அனுமதிக்கப்படுகின்றன. இந்த வரம்புகள் நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் இரண்டிற்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரிசையில், HDFC வங்கியின் வலைத்தளத்தின்படி, மே 1, 2025 முதல், இலவச வரம்பைத் தாண்டிய ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ரூ. 21 + வரிகள் என்பதில் இருந்து ரூ. 23 + வரிகள் ஆக உயர்கிறது.
இண்டஸ்இண்ட் வங்கி வலைத்தளத்தின்படி, மே 1, 2025 முதல், இண்டஸ்இண்ட் வங்கி அல்லாத பிற ஏடிஎம்களில் இலவச வரம்புகளுக்கு அப்பால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 23 ரூபாய் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.